மும்பை போட்டிக்கு பிறகு தோனியிடம் தலைவணங்கிய ஜடேஜா! வைரலாகும் வீடியோ
மும்பைக்கு எதிரான த்ரில் வெற்றிக்கு பிறகு தோனிக்கு தலைவணங்கி ஜடேஜா மரியாதை செலுத்தி பாராட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
நேற்று மும்பையில் நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை-சென்னை அணிகள் மோதின.
மும்பை வீழ்த்த சென்னை அணிக்கு கடைசி 6 பந்துகளில் 17 ரன்கள் தேவைப்பட்டது.
கடைசி ஒவரை மும்பை வீரர் Unadkat வீச முதல் பந்திலேயே சென்னை வீரர் Pretorius அவுட்டானார். இதனையடுத்து களமிறங்கிய பிராவோ, 2வது பந்தில் 1 ரன் எடுத்தார்.
3வது சந்தித்த தோனி, சிக்ஸர் அடித்தார். 4வது பந்தை பவுண்டரிக்கு விளாசி தோனி, 5வது பந்தில் 2 ரன்கள் எடுத்தார்.
கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தோனி பவுண்டரி அடித்து பட்டையை கிளப்பினார்.
Cool,Calm and compose.
— Sherlòck? (@Valar_Dohaeeris) April 21, 2022
Finally Dhoni finishes off his style ? pic.twitter.com/i730Jgr1fg
பிரித்தானியாவில் உக்ரேனிய துருப்புகளுக்கு ரகசிய பயிற்சி! கசிந்த முக்கிய தகவல்
இதன் மூலம் சென்னை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது.
போட்டி முடிந்த பின் தோனி அருகே வந்த, சிஎஸ்கே கேப்டன் ஜடேஜா, தனது தொப்பியை கழட்டி தோனி முன் தலைவணங்கி மரியாதை செலுத்தினார்.
Nobody finishes cricket matches like him and yet again MS Dhoni 28* (13) shows why he is the best finisher. A four off the final ball to take @ChennaiIPL home.
— IndianPremierLeague (@IPL) April 21, 2022
What a finish! #TATAIPL #MIvCSK pic.twitter.com/oAFOOi5uyJ
பின், மகிழ்ச்சியில் தோனியை கட்டி தழுவி வாழ்த்தினார். குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.