மூட்டை முடிச்சை கட்டிகிட்டு ஊருக்கு போக வேண்டியது தான்! இந்தியா அரையிறுதி வாய்ப்பு தொடர்பில் ஜடேஜா பேசிய வீடியோ
இந்தியா - ஸ்காட்லாந்து போட்டி முடிந்த பின்னர் செய்தியாளர் சந்திப்பில் ஜடேஜா கிண்டலாக பேசிய வீடியோ வைரலாகியுள்ளது.
இந்தியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் 6.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டிய இந்தியா 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்தநிலையில், இந்த போட்டி பிறகு நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் இந்திய அணி சார்பாக ரவீந்திர ஜடேஜா கலந்து கொண்டார்.
இதில் பத்திரிக்கையாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு ஜடேஜா ஓபனாக பதில் கொடுத்தார். அதில் பத்திரிக்கையாளர் ஒருவர் ஜடேஜாவிடம், ஆஃப்கானிஸ்தான் அணியால் நியூசிலாந்து அணியை வீழ்த்த முடியாவிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள் என கேள்வி எழுப்பினார்,
— pant shirt fc (@pant_fc) November 5, 2021
இதற்கு சற்றும் யோசிக்காத ரவீந்திர ஜடேஜா, வேறு என்ன மூட்டை முடிச்சை கட்டி கொண்டு ஊருக்கு போக வேண்டியது தான் (“Then what?…. We’ll pack our bags and go back home.” ) என்கிற கிண்டல தொனியில் பதில் கொடுத்துள்ளார்.
நாளை நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து அணியை ஆப்கானிஸ்தான் வென்றால் மட்டுமே ரன்ரேட் அடிப்படையில் இந்தியா அரை இறுதி வாய்ப்பை நினைத்து பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.