2 மாதத்திற்கு பிறகு மீண்டும் இந்திய அணிக்கு திரும்பிய அதிரடி ஆட்டக்காரர்
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரின் போது ஜடேஜாவுக்கு முழங்காலில் ஏற்பட்ட காயம் ஏற்பட்டது. இதற்கு சிகிச்சைப் பெற்று வந்ததால் தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸிக்கு எதிரான தொடரில் அவர் பங்கேற்கவில்லை.
ஜடேஜா காயம் காரணமாக ஓய்வில் இருந்த நிலையில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பியுள்ளார். இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கவிருக்கும் அவர் பயிற்சியில் ஈடுபட்டார்.
மீண்டும் ஆடவுள்ளது குறித்து ஜடேஜா பேட்டியளித்துள்ளார். அதில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இந்தியாவுக்காக விளையாடவுள்ள நான் நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறேன். இலங்கை தொடருக்காக மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இதற்காக பெங்களூருவில் பந்துவீச்சு, பேட்டிங் பயிற்சி செய்து வருகிறேன் எனவும் ஜடேஜா கூறியுள்ளார்.இதன்மூலம் அணியில் தான் இடம் பெற வேண்டும் என்பதை ஜடேஜா வலியுறுத்துவதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.