ஒரே ஓவரில் ராஜஸ்தான் அணிக்கு செக் வைத்த ஜடேஜா! ஆர்ப்பரித்த CSK ரசிகர்கள்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரவீந்திர ஜடேஜா ஒரே ஓவரில் இரண்டு மிரட்டலான வீரர்களை ஆட்டமிழக்க செய்தார்.
படிக்கல் மிரட்டல்
சென்னையில் நடந்து வரும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றன.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி ராஜஸ்தான் அணி களமிறங்கியது.
ஜெய்ஸ்வால் 10 ஓட்டங்களில் தேஷ்பாண்டே ஓவரில் வெளியேறினார். அதன் பின்னர் களமிறங்கிய படிக்கல் சென்னை அணிக்கு கடுமையான நெருக்கடி கொடுத்தார். அவர் பவுண்டரிகளை அடுத்தடுத்து விரட்டினார்.
.@imjadeja on ?
— IndianPremierLeague (@IPL) April 12, 2023
He gets the wickets of Devdutt Padikkal and #RR captain Sanju Samson in the same over ? ?@ChennaiIPL are on a roll here ? ?
Watch those wickets ?
Follow the match ▶️ https://t.co/IgV0ZtiJJA#TATAIPL | #CSKvRR pic.twitter.com/4KwaPeh420
செக் வைத்த ஜடேஜா
அப்போது பந்துவீச வந்த ஜடேஜா, மூன்றாவது பந்தில் படிக்கலை அவுட் ஆக்கினார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை போல்டாக்கினார் ஜடேஜா.
ஒரே ஓவரில் இரண்டு முக்கிய வீரர்களை ஜடேஜா வெளியேற்றியதால், ராஜஸ்தான் அணியின் ரன் வேகம் குறைந்தது.
படிக்கல் 38 (26) ஓட்டங்களில் ஆட்டமிழந்த நிலையில், ஜோஸ் பட்லர் மூன்று சிக்ஸர்களை விளாசி 42 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.
Ja-mbavan of a player ?#CSKvRR #WhistlePodu #Yellove ?? @imjadeja pic.twitter.com/lRWIn8Y13w
— Chennai Super Kings (@ChennaiIPL) April 12, 2023