மீண்டும் களத்தில் இறங்கிய ஜடேஜா! மாயாஜால சூழலில் சரிந்த விக்கெட்டுகள்
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ரவீந்திர ஜடேஜா அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
மீண்டும் களத்தில் இறங்கிய ஜடேஜா
நாக்பூரில் நடந்து வரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா நீண்ட இடைவெளிக்கு பிறகு களமிறங்கினார்.
காயத்திற்கு பிறகு மீண்டும் டெஸ்டில் விளையாடும் ஜடேஜா, தனது மாயாஜால சுழற்பந்துவீச்சை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ஜடேஜா பந்துவீச்சில் மிரட்டினார்.
@Icc
லபுசாக்னே (49) விக்கெட்டை வீழ்த்திய அவர், அடுத்த பந்திலேயே ரென்ஷாவை வெளியேற்றினார்.
4 விக்கெட்டுகள்
பின்னர் 37 ஓட்டங்கள் எடுத்திருந்த ஸ்டீவன் ஸ்மித் போல்டானார். அவரைத் தொடர்ந்து தனது முதல் டெஸ்டில் களமிறங்கிய டாட் முர்பியையும் அவர் ஆட்டமிழக்க செய்தார்.
இதன்மூலம் ஜடேஜா 4 விக்கெட்டுக்களை வீழ்த்தி அவுஸ்திரேலிய அணியை கலங்கடித்துள்ளார். அவரது பந்துவீச்சை பார்த்து ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.
@Bcci
@Icc