டோனியை மோசமாக கிண்டலடித்த ஐபிஎல் அணி! ஜடோஜா தந்த பதிலடி
டோனியை கிண்டலடித்த கேகேஆர் அணிக்கு ஜடேஜா பதிலடி தந்துள்ளார்.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் இன்று நடைபெற்றது. ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி இந்த போட்டியை டிராவில் முடித்தனர்.
ஐந்தாம் நாள் ஆட்டநேர முடிவில் மூன்று ஓவர்களுக்குள் மீதமிருந்த ஒரு விக்கெட்டை எடுத்தால் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறலாம் என்ற கட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் அனைத்து வீரர்களும் பேட்ஸ்மேனை சுற்றி நின்றனர்.
இதேபோல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கௌதம் கம்பீர் கேப்டனாக இருந்தபோது ரைசிங் புனே அணிசார்பாக தோனி பேட்டிங் செய்யும் பொழுது, இதேபோல் அனைத்து வீரர்களையும் சுற்றி நிற்க வைத்தார். இந்த இரண்டு புகைப்படங்களையும் சேர்த்து "master stroke" என்று பதிவு செய்திருந்தனர்.
இதற்கு ட்வீட்க்கு அனைத்து தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த ட்வீட்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரவீந்திர ஜடேஜா "இது பெரிய மைல்கல் அல்ல. வெறும் விளம்பரம் தான்" என்று பதில் அளித்துள்ளார்.
ஜடேஜாவின் இந்த ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.