நாங்கள் அவரை நம்பினோம்... விரக்தியில் பேசிய ஜடேஜா!
ஜோர்டானின் பந்துவீச்சை மிகவும் நம்பியதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் ரவீந்திர ஜடேஜாவுடன் விரக்தியுடன் தெரிவித்துள்ளார்.
புனேவில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து அதிர்ச்சி அளித்தது. நடப்பு தொடரில் CSK அணிக்கு இது 5வது தோல்வியாகும்.
ஆட்டத்தின் கடைசி ஓவரை ஜோர்டன் வீசினார். வெற்றிக்கு 13 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் குஜராத் அணியின் மில்லர் வெற்றிகரமாக முடித்து வைத்தார். இந்நிலையில் தோல்வி குறித்து பேசிய CSK அணித்தலைவர் ஜடேஜா கூறுகையில், 'நாங்கள் சிறப்பாக தான் தொடக்கத்தை கொடுத்தோம். முதல் 6 ஓவர்களில் சிறப்பாக பந்து வீசினோம்.
CSK பேட்டிங் செய்தபோது விக்கெட்டுகள் மெதுவாக இருந்தது. பந்து வழுக்கவில்லை. ஆனால் நாங்கள் பந்து வீசிய பொது அப்படி இல்லை.
கடைசி 5 ஓவர்களில் திட்டத்தை செயல்படுத்தவே இல்லை. கடைசி கட்டத்தில் கிறிஸ் ஜோர்டன் யார்க்கர் சரியாக அமையும் என எதிர்பார்த்தேன். ஆனால் அவரால் எங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை. டி20 கிரிக்கெட்டில் இதெல்லாம் வழக்கம் தான்' என தெரிவித்துள்ளார்.