மனைவியைக் கொன்றுவிட்டு பிள்ளைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த நபர்: பிரித்தானிய அரசு அதிரடி முடிவு
பிரித்தானியாவில், மனைவியைக் கொன்ற ஒருவர் சிறை சென்ற நிலையிலும், தங்கள் பிள்ளைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிலையில், இதுபோன்ற நிகழ்வுகள் இனி தொடராத வகையில் பிரித்தானிய அரசு அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
மனைவியைக் கொன்றுவிட்டு பிள்ளைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த நபர்
வேல்ஸ் நாட்டிலுள்ள Shotton என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில், தங்கள் நான்கு மகன்களும் தூங்கிக்கொண்டிருந்தபோது, தன் முன்னாள் மனைவியான Jade Ward (27) என்னும் பெண்ணைக் கொலை செய்தார் Russell Marsh.
Marshக்கு 25 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். ஆனாலும், சிறையிலிருந்தவாறே அவர் தன் பிள்ளைகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருக்கிறார். அவர்கள் எங்கு படிப்பது என்பது முதல், அவர்களுடைய உடல் நலம் குறித்து அறிந்துகொள்வது, அவர்கள் பாஸ்போர்ட் வைத்திருப்பதைக் கட்டுப்படுத்துவது வரை பிள்ளைகள் குறித்த அனைத்து விடயங்களையும் அவர் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருக்கிறார்.
ஆகவே, அதை எதிர்த்து, கொல்லப்பட்ட Jadeஇன் பெற்றோர், பிரித்தானிய ஊடகம் ஒன்றின் உதவியுடன் பிரச்சாரம் ஒன்றைத் துவக்கியுள்ளார்கள். தம்பதியரில் ஒருவர் மற்றவரைக் கொன்றுவிட்டால், அவர்கள் தங்கள் பிள்ளைகளின் மீதான உரிமைகளை தானாகவே இழந்துவிடும் வகையில் சட்டம் ஒன்றை உருவாக்க அவர்கள் கோரிவந்தார்கள்.
பிரித்தானிய அரசு அதிரடி முடிவு
Jadeஇன் பெற்றோரின் கோரிக்கையை ஏற்று, Jade’s Law என்னும் ஒரு சட்டத்தை உருவாக்க அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, பெற்றோரில் ஒருவர் மற்றவரைக் கொன்றுவிட்டால், அவர் தங்கள் பிள்ளைகளின் மீதான உரிமைகளை தானாகவே இழந்துவிடுவார்.
பிள்ளைகள் எந்த பள்ளியில் படிப்பது, அவர்கள் பாஸ்போர்ட் வைத்திருக்கலாமா என, பிள்ளைகள் தொடர்பில் அந்த நபர் எந்த முடிவையும் இனி எடுக்க முடியாத வகையில், Jade’s Law என்னும் ஒரு சட்டத்தை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளில், நீதித்துறைச் செயலரான Alex Chalk மும்முரமாக ஈடுபட்டுவருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |