‘மதியம் சாப்டது இன்னும் செரிக்கல’இந்தியர்களை சீண்டிய பாகிஸ்தானை கதறவிட்ட வாசிம் ஜாபர்
டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து இந்திய வெளியேறிய பிறகு இந்தியர்களை சீண்டிய கிரிக்கெட் பாகிஸ்தானுக்கு இந்திய முன்னாள் வீரர் வாசின் ஜாபர் தகுந்த பதிலளித்து கதறவிட்டுள்ளார்.
நேற்று நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் தோற்றதால், இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.
டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் தகுதிப்பெற்றுள்ளன.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து இந்திய வெளியேறி பிறகு, கிரிக்கெட் பாகிஸ்தான் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இந்திய ரசிகர்களே, எப்படி உணர்கிறீர்கள்?' என இந்தியர்களை சீண்டும் வகையில் பதிவிட்டது.
இதற்கு இந்திய முன்னாள் வீரர் வாசின் ஜாபர், தரமான பதிலளித்து கிரிக்கெட் பாகிஸ்தானை கதறவிட்டுள்ளார்.
12-1 மணிக்கு இடையில் ஃபுல்ல மதிய உணவு சாப்பிட்டேன், இன்னும் வயிறு ஃபுல்லாவே இருக்கு என மாலை 4:30 மணியளவில் கிரிக்கெட் பாகிஸ்தான் ட்விட்டுக்கு வாசிம் ஜாபர் பதிலளித்துள்ளார்.\
Had a heavy lunch between 12-1, still feeling full ? #NZvsAfg #T20WorldCup https://t.co/wJ58RUSnh0
— Wasim Jaffer (@WasimJaffer14) November 7, 2021
வாசிம் ஜாபரின் இந்த பதிலை இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.