LPL 2026 இறுதிபோட்டி: ஜாஃப்னா கிங்ஸ் 123 ஓட்டங்களுக்கு ஆல்அவுட்
காலி கல்லன்ட்ஸ் அணிக்கு எதிரான LPL 2026 இறுதிப்போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் 123 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
லங்கா பிரீமியர் லீக் 2026 இறுதிப்போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் அணி 19.3 ஓவர்களில் 123 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
இறுதிப்போட்டி
கொழும்பில் லங்கா பிரீமியர் லீக் 2026 தொடரின் இறுதிபோட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் மற்றும் காலி கல்லன்ட்ஸ் அணிகள் மோதி வருகின்றன.
நாணய சுழற்சியில் வென்ற ஜாஃப்னா கிங்ஸ் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து களமிறங்கியது. அவிஷ்கா பெர்னாண்டோ 20 (16) ஓட்டங்களில் ஆட்டமிழக்க, கவாஜா நபாய் டக்அவுட் ஆனார்.
கமில் மிஷாரா (Kamil Mishara) பொறுப்புடன் ஆட ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
ஜாஃப்னா கிங்ஸ்
அணியின் ஸ்கோர் 87 ஆக இருந்தபோது, கமில் மிஷாரா 41 (32) ஓட்டங்களில் இஷான் மலிங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய சமிந்து விக்ரமசிங்கே 16 பந்துகளில் 24 ஓட்டங்கள் விளாசினார். ஜாஃப்னா கிங்ஸ் அணி 19.3 ஓவர்களில் 123 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
காலி அணியின் தரப்பில் சரித் அசலங்கா, இஷான் மலிங்கா தலா 3 விக்கெட்டுகளும், தரிந்து ரத்னாயகே 2 விக்கெட்டுகளும், ஆகிப் மற்றும் சச்சிந்து தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |