கேப்டன் கமிந்து மெண்டிஸ் 58 ஓட்டங்கள் விளாசல்: ஜாஃப்னா கிங்ஸ் த்ரில் வெற்றி
லங்கா பிரீமியர் லீக் போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொழும்பு காப்ஸ் அணியை வீழ்த்தியது.
179 ஓட்டங்கள்
கொழும்பு காப்ஸ் மற்றும் ஜாஃப்னா கிங்ஸ் அணிகள் மோதிய போட்டி தம்புள்ளையில் நடந்தது.
முதலில் ஆடிய ஜாஃப்னா கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ஓட்டங்கள் குவித்தது.
சமிந்து விக்ரமசிங்கே 43 (22) ஓட்டங்களும், கமில் மிஷாரா 39 ஓட்டங்களும், அவிஷ்கா ஃபெர்னாண்டோ 34 ஓட்டங்களும் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய கொழும்பு காப்ஸ் அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
கமிந்து மெண்டிஸ் அரைசதம்
அணிதலைவர் கமிந்து மெண்டிஸ் (Kamindu Mendis) அதிரடியாக 42 பந்துகளில் 58 ஓட்டங்கள் (2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள்) விளாசினார்.
அடுத்து வந்த ஷாருஜன் 26 ஓட்டங்களும், மிலன் 15 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்க, வனுஜா சஹான் வெற்றிக்காக போராடினார்.
20வது ஓவரில் வெற்றிக்கு 27 ஓட்டங்கள் தேவைப்பட, வனுஜா 3வது பந்தில் இருந்து ஹாட்ரிக் பவுண்டரி அடித்தார். மேலும், கடைசி பந்தில் சிக்ஸர் அடித்தார்.
இதன்மூலம் ஜாஃப்னா கிங்ஸ் அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. வனுஜா 15 பந்துகளில் 35 ஓட்டங்கள் விளாசினார்.
மிரட்டலாக பந்துவீசிய லிஸாத் வில்லியம்ஸ் 3 விக்கெட்டுகளும், தில்ஷான் மதுஷன்கா மற்றும் ட்ரவீன் மேத்யூ தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |