லங்கா பிரீமியர் லீக்: காலே அணியை துவம்சம் செய்த ஜாஃப்னா கிங்ஸ்! அரைசதம் விளாசிய குசால் மெண்டிஸ்
ஹம்பன்டோடவில் நடந்த போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் காலே கிளாடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தியது.
சோயிப் மாலிக், வெல்லாலகே பொறுப்பான ஆட்டம்
லங்கா பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் மற்றும் காலே கிளாடியேட்டர்ஸ் அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற காலே அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய ஜாஃப்னா கிங்ஸ் அணி 19.5 ஓவர்களில் 137 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
Galle Gladiators have won the toss and decided to bowl first.#lankapremierleague2022 #lpl #lplt20 #cricket #t20 #t20cricket #LankaPremierLeague2022 pic.twitter.com/bhdDRhNQZ2
— LPL - Lanka Premier League (@LPLT20) December 6, 2022
அதிகபட்சமாக சோயிப் மாலிக் 30 ஓட்டங்களும், வெல்லாலகே 30 ஓட்டங்களும் எடுத்தனர். காலே அணியின் தரப்பில் வாஹப் ரியாஸ், இமாத் வசிம், துஷாரா, நுவான் பிரதீப், மற்றும் இஃப்திக்கர் அகமது தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Kusal Mendis 50*
— LPL - Lanka Premier League (@LPLT20) December 6, 2022
Match 01 - JK VS GG
-
Get your tickets exclusively on https://t.co/VsoVs5Kcnv@OfficialSLC @ipg_productions
-#LPL2022 #LPLT20 #WinTogether #එක්වජයගමු #lankapremierleague2022 #lpl #lplt20 #cricket #t20 #t20cricket pic.twitter.com/IQdaMiMmX4
குசால் மெண்டிஸ் அரைசதம்
பின்னர் களமிறங்கிய காலே அணியில் கேப்டன் குசால் மெண்டிஸ் பொறுப்பாக ஆடி 51 ஓட்டங்கள் எடுத்தார். ஆனால் மற்ற வீரர்கள் சொதப்பியதால் காலே அணி 113 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
மிரட்டலாக பந்துவீசிய பினுரா பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளையும், விஜயகாந்த் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 30 ஓட்டங்களுடன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்திய துனித் வெல்லாலகே ஆட்டநாயகன் விருது பெற்றார்.
Jaffna Kings have won by 24 runs
— LPL - Lanka Premier League (@LPLT20) December 6, 2022
Match 01 JK VS GG
-
Get your tickets exclusively on https://t.co/VsoVs5Kcnv@OfficialSLC @ipg_productions
-#LPL2022 #LPLT20 #WinTogether #එක්වජයගමු #lankapremierleague2022 #lpl #lplt20 #cricket #t20 #t20cricket pic.twitter.com/iBI1KlJKQO