சதம் விளாசிய குசால் மெண்டிஸ்! 1 ரன்னில் த்ரில் வெற்றி..இறுதிப்போட்டியில் மகுடம் சூடப்போவது யார்?
கொழும்பில் நடந்த குவாலிபையர்-2 போட்டியில் கண்டி ஃபால்கன்ஸ் அணியை 1 ரன்னில் வீழ்த்தி, ஜப்னா கிங்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
குசால் மெண்டிஸ் சதம்
LPL 2024 குவாலிபையர்-2 போட்டியில் ஜப்னா கிங்ஸ் (Jaffna Kings) மற்றும் கண்டி கிங்ஸ் (Kandy Falcons) அணிகள் மோதின.
முதலில் ஆடிய ஜப்னா கிங்ஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 187 ஓட்டங்கள் குவித்தது. குசால் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 54 பந்துகளில் 5 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 105 ஓட்டங்கள் குவித்தார்.
COMEBACK KING ???
— LPL - Lanka Premier League (@LPLT20) July 20, 2024
? Kusal Mendis ? silences the doubters with a stunning 100! ? After a tough tournament, he proves everyone wrong with this epic knock.
Check out the clip! ?#LPL2024 pic.twitter.com/GzW9SdW98D
பின்னர் களமிறங்கிய கண்டி கிங்ஸ் அணியில் ஆந்த்ரே ஃப்ளெட்சர் 38 ஓட்டங்களும், கமிந்து மெண்டிஸ் 32 ஓட்டங்களும் விளாசினர். எனினும் வியாஸ்காந்த், ஆலன் ஆகியோரின் மிரட்டலான பந்துவீச்சில் விக்கெட்டுகள் சரிந்தன.
மாற்றுத்திறனாளி இலங்கை சிறுமிக்கு இன்ப அதிர்ச்சி தந்த ஸ்மிருதி மந்தனா! மகிழ்ச்சியில் பேசிய தாய் (வீடியோ)
த்ரில் வெற்றி
கடைசி கட்டத்தில் ரமேஷ் மெண்டிஸ் அதிரடியில் மிரட்டினார். கண்டி அணியின் வெற்றிக்கு 1 பந்தில் 4 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், 2 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதனால் 1 ரன் வித்தியாசத்தில் ஜப்னா கிங்ஸ் த்ரில் வெற்றி பெற்றது. ரமேஷ் மெண்டிஸ் 11 பந்துகளில் 30 ஓட்டங்கள் எடுத்தார். ஜப்னா கிங்ஸ் தரப்பில் ஃபாபியன் ஆலன் 4 விக்கெட்டுகளும், வியாஸ்காந்த் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஜப்னா கிங்ஸ் இன்று நடைபெற உள்ள போட்டியில் காலி மார்வெல்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.
? Player of the Match: Kusal Mendis! ??
— LPL - Lanka Premier League (@LPLT20) July 20, 2024
Kusal Mendis delivers a rocking 105 runs, a much-needed knock that propels the Kings into the Finals! What a performance! ??#LankaPremierLeague #LPLT20 #SriLankaCricket #SLC #CricketFever #T20Cricket #LPL2024 pic.twitter.com/0rcjakbFw2
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |