விளையாட்டில் முதலிடம் பெற்ற மாணவி: யாழ்ப்பாணத்தில் மாணவி விபரீத முடிவு
யாழ்பானத்தில் விளையாட்டு போட்டியில் முதலிடம் பிடித்த கல்லூரி பெண் எடுத்த விபரீத முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி எடுத்த விபரீத முடிவு
யாழ்ப்பாணம் - உடுவில் மகளிர் கல்லூரியில் கல்வி பயிலும் முல்லைத்தீவை சேர்ந்த 14 வயதுடைய மாணவி விளையாட்டு போட்டி ஒன்றில் முதலிடம் பெற்றுள்ளார்.
இதனால் அவரது சக வகுப்பு மாணவிகள் அவளிடம் பேசாமல் விலகி இருந்துள்ளனர்./// இதனால் மனமுடைந்த மாணவி நேற்று 2வது மாடியில் இருந்து குதித்து படுகாயமடைந்துள்ளார்.
இவர் மாணவிகள் விடுதியில் கடந்த ஒரு வருட காலமாக தங்கியிருந்த கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
படுகாயம்
இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்ததால் மாணவியின் காலில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது தனது வாக்குமூலத்தில் விளையாட்டு போட்டியில் வென்றது, சக மாணவிகள் விலகி இருந்தது ஆகியவை தெரியவந்துள்ளது.
அத்துடன் படுகாயமடைந்த மாணவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |