திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த யாழ்ப்பாண இளைஞர்: பொலிஸார் விசாரணை
யாழ்ப்பாணத்தில் திடீரென மயங்கி விழுந்த இளைஞர் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த இளைஞர்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த தனபாலசிங்கம் சிந்துஜன் என்ற 19 வயதுடைய இளைஞர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
காய்ச்சலும், வாந்தியும் ஏற்பட்ட நிலையில் திடீரென மயங்கி விழுந்து தனபாலசிங்கம் சிந்துஜன் நேற்று(25.01.2024) உயிரிழந்துள்ளார்.
விஜய் அரசியலுக்கு வரவிருக்கிறார்..!காக்கா-கழுகு கதைக்கு முற்றுப்புள்ளி வைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
பொலிஸார் விசாரணை
தனபாலசிங்கம் சிந்துஜன் யாழ்ப்பாணம் - கீரிமலை பகுதியில் தங்கி இருந்து வேலை செய்து வந்துள்ளார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் அவருக்கு காய்ச்சல் மற்றும் வாந்தி ஏற்பட்ட நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
அதன்படி அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன், மேலதிக விசாரணைக்காக உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |