சர்க்கரை நோயாளிகளுக்கு வெல்லம் ஆபத்தை ஏற்படுத்துமா ?
வெல்லத்தில் பல சத்துக்கள் உள்ளன மற்றும் அதன் நுகர்வு ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது.
வெல்லத்தில் கால்சியம், இரும்பு, பொட்டாசியம், சோடியம், எனர்ஜி, சர்க்கரை போன்ற சத்துக்கள் இருப்பதால், பல பிரச்சனைகளில் இருந்து காத்து ஆரோக்கியத்தை வழங்கும்.
கரும்புச் சாற்றில் காணப்படும் அனைத்து தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் வெல்லத்தில் அடங்கியுள்ளதால் இது பாதுகாப்பானது என்று கருதப்படுகிறது.
சர்க்கரைக்கு மாற்றாக சிலர் வெல்லத்தை பயன்படுத்துவது உண்டு. ஆனால், உண்மையில் இந்த வெல்லம் சர்க்கரை நோயாளிகளுக்கு ஆரோக்கியமானது தானா என்பது குறித்து பலருக்கும் தெரிவதில்லை.
உண்மையில் வெல்லம் சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மையா? தீமையா ? என்று இங்கே தெரிந்து கொள்வோம்.
வெல்லம் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?
வெல்லத்தில் சுமார் 65 முதல் 85 சதவீதம் சுக்ரோஸ் உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஒரு சர்க்கரை நோயாளியின் சிறந்த உணவில் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட உணவுகள் இருக்கப்பட்ட வேண்டும். அதே நேரத்தில் வெல்லம் மிக உயர்ந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது.
எனவே இதை உட்கொள்ளும் போது, இது உடனடியாக இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது மற்றும் சிறுநீரக நோய், இதய நோய், உறுப்புகள் செயலிழப்பு போன்ற கடுமையான உடல்நல விளைவுகளுக்கும் வழிவகுக்கும்.
குறிப்பாக வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த பாதிப்பு அதிகம். 100 கிராம் வெல்லத்தில் 383 கலோரிகள், 65-85 கிராம் சுக்ரோஸ், 10-15 கிராம் பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை உள்ளன.
நீங்கள் முற்றிலும் ஆரோக்கியமாக இருந்தால் மற்றும் இரத்தச் சர்க்கரைக் கோளாறுகள் ஏதும் இல்லை என்றால், நீங்கள் வெல்லத்தை வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாக உட்கொள்ளலாம். ஆனால், உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், வெல்லத்தை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.