வெதுவெதுப்பான தண்ணீருடன் வெல்லம் சேர்த்து பாருங்க! இந்த நன்மைகள் எல்லாம் கிடைக்குமாம்
வெல்லம் என்பது கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை இனிப்பு. சர்க்கரையின் ஒரு ஆரோக்கியமான மாற்று என்று கருதப்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் இருந்து நமது நுரையீரலை சுத்தப்படுத்துவது வரை, வெல்லம் பல்வேறு உடல் ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது.
அதுமட்டுமின்றி இதனை வெதுப்பான நீருடன் கலந்து குடிப்பதனால் உடலுக்கு பல நன்மைகளை அள்ளித்தருகின்றது.
அந்தவகையில் வெதுவெதுப்பான தண்ணீருடன் வெல்லம் கலப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
எப்படி எடுத்து கொள்ள வேண்டும்?
வெதுவெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி வெல்லம் தூள் கலந்து, எலுமிச்சை சாறு சேர்த்ததும் சுவையான வைட்டமின் சி அடங்கிய பானம் தயார். இப்போது அதை மெதுவாக உட்கொள்ளுங்கள்.
நன்மைகள் என்ன?
- எதிர்த்துப் போராடும். உடலை நிதானப்படுத்துவதோடு நோய்த்தொற்றுக்கு எதிரான சக்தியை அதிகரிக்கும்.
- காலையில் சூடான வெல்லத் தண்ணீரைக் குடிப்பது உங்கள் வயிற்று புண்களை ஆற்றவும் நச்சுகளை வெளியேற்றவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவும்.
- இதன் அமிலத்தன்மை, மலச்சிக்கல் மற்றும் பிற செரிமான பிரச்சினைகளை நீக்க உதவுகிறது.
- இது உடல் வெப்பநிலையை உறுதிப்படுத்த உதவுகிறது. இரத்த நாளங்களை தளர்வாக்க உதவுகிறது. இது உடலில் வெப்பத்தை உருவாக்குகிறது. உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.உடலில் நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது.
- வெல்லத்தில் உள்ள தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதோடு பருவகால காய்ச்சலிலிருந்து மீள உதவும் என்று கூறப்படுகிறது.
- உடலில் அதிக நீர் இருப்பது எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். வெல்லத்தில் உள்ள பொட்டாசியம் உடலில் எலக்ட்ரோலைட் சமநிலையை நிர்வகிக்க உதவுகிறது. இதனால், உடலில் இருக்கு அதிக நீரை குறைக்கிறது. இது எடை இழப்புக்கு மேலும் உதவுகிறது.
குறிப்பு
வெல்லம் சர்க்கரைக்கு மாற்றாக இருந்தாலும், நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் வெல்லத்தை சேர்ப்பதற்கு முன்பு தங்கள் மருத்துவரை அணுகி ஆலோசிக்க வேண்டும்.
ஏனென்றால், வெல்லத்தில் அதிக அளவு கிளைசெமிக் இருப்பதால் அது திடீரென சர்க்கரையை அதிகரிக்கும்.