கனடா தேர்தல்: மீண்டும் கனடாவில் கிங் மேக்கராகும் இந்திய வம்சாவளியினர்...
நடந்து முடிந்த கனடா நாடாளுமன்றத் தேர்தலில் ட்ரூடோவின் கட்சி வெற்றி பெற்றாலும், அவருக்கு பெரும்பான்மை இல்லாததால், அவர் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன்தான் ஆட்சியை அமைக்கவேண்டியிருக்கிறது.
அந்த வகையில், அவருக்கு ஆதரவளித்து ஆட்சியை அமைக்க உதவுவார் என எதிர்பார்க்கப்படுவதால், NDP கட்சியின் தலைவரான இந்திய வம்சாவளியினரான ஜக்மீத் சிங் இம்முறையும் கிங் மேக்கராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் ட்ரூடோ பெரும்பான்மை பெறாததால், ஜக்மீத் சிங்கின் NDP கட்சி, Yves-Francois Blanchetஇன் Bloc Quebecois ஆகிய கட்சிகளின் ஆதரவுடன்தான் அவர் ஆட்சி அமைத்தார்.
இம்முறையும் ட்ரூடோ பெரும்பான்மை பெறாததால் NDP கட்சியின் தலைவரான ஜக்மீத் சிங்கின் ஆதரவுடனேயே இம்முறையும் அவர் ஆட்சியமைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
NDPயும் அதன் கூட்டணிக் கட்சிகளும் 25 இடங்களை வென்றுள்ளன. ட்ரூடோ கட்சி 158 இடங்களைக் கைப்பற்றியுள்ளதால், ட்ரூடோ கட்சியும், ஜக்மீத் சிங்கின் கூட்டணிக்கட்சிகளும் இணைந்தால் ஆட்சியமைக்கத் தேவையான 170 இடங்கள் கிடைத்துவிடும்.
ஆக, 2019ஆம் ஆண்டைப்போலவே, மீண்டும் ஆட்சியமைக்க உதவ இருப்பதால், கிங் மேக்கராகும் வாய்ப்பு ஜக்மீத் சிங்கிற்கு மீண்டும் கிடைத்துள்ளது.