புதிய Jaguar மின்சார கார் UK-வில் அறிமுகம்
Jaguar Launches 130K Pound Electric Car 2026: பிரித்தானியாவின் பிரபல கார் பிராண்டான ஜாகுவார் (Jaguar), 2026 அக்டோபர் மாதம் தனது புதிய மின்சார காரை அறிமுகப்படுத்தியுள்ளது.
“Jaguar Type 01” எனப்படும் இந்த மாடல், 1,30,000 பவுண்டு மதிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த கார், ஜாகுவாரின் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அறிமுகமான முதல் புதிய மாடல் ஆகும்.
2024-ஆம் ஆண்டு பிராண்டின் முழுமையான மறுசீரமைப்புக்குப் பிறகு, ஜாகுவார் தனது விற்பனையை நிறுத்தி, லக்ஷுரி மின்சார வாகனங்களில் மட்டும் கவனம் செலுத்துவதாக அறிவித்தது.

Jaguar Type 01 கார், இங்கிலாந்தின் Solihull தொழிற்சாலையில் தயாரிக்கப்படும். மின்சார இயக்கக் கருவிகள் மற்றும் பேட்டரி பாகங்கள் Wolverhampton பகுதியில் தயாரிக்கப்படுகின்றன.
இந்த கார், 400 மைல்கள் (644 கி.மீ.) வரை ஒரே சார்ஜில் பயணிக்க முடியும். மேலும், 13 நிமிடங்களில் 200 மைல்கள் வரை வேக சார்ஜ் செய்யும் திறன் கொண்டது. 0-62 மைல் வேகத்தை 3.2 விநாடிகளில் அடையும் திறனும் உள்ளது.

ஜாகுவார், இம்முறை இளம் வாடிக்கையாளர்களை, குறிப்பாக அமெரிக்க சந்தையை குறிவைத்து இந்த மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை, ஜாகுவார் நடுத்தர வயது வாடிக்கையாளர்களிடையே பிரபலமாக இருந்தது. ஆனால், புதிய மின்சார மாடல், பிராண்டின் எதிர்கால வளர்ச்சிக்கான முக்கிய முயற்சியாக கருதப்படுகிறது.
பிரித்தானிய வணிகச் செயலாளர் ஜொனாதன் ரெய்னல்ட்ஸ், “இந்த புதிய ஜாகுவார், எங்கள் உலகத் தரமான ஆட்டோமொபைல் தொழில்துறைக்கு பெரிய நம்பிக்கை வாக்காகும்” என்று தெரிவித்துள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |