இந்த ஆண்டு IPLயில் எங்கள் அணிக்கு இவரே மதிப்புமிக்க வீரர்!
அஜிங்யா ரஹானே எங்கள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மிகவும் மதிப்பு மிக்க தேர்வு என அந்த அணியின் துணை உரிமையாளர் ஜஹனாவி மெஹதா தெரிவித்துள்ளார்.
IPL யின் 15வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் நேற்று நடைபெற்று முடிந்துள்ளது. இதில் இந்திய அணி வீரர் அஜிங்யா ரஹானேவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 1 கோடி என்ற விலைக்கு வாங்கியது.
இதனை தொடர்ந்து அந்த அணியின் துணை உரிமையாளர் ஜஹனாவி மெஹதா ஸ்டார் ஸ்போர்ட் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அஜிங்யா ரஹானே எங்கள் அணிக்கு மிகவும் மதிப்பு மிக்க தேர்வாக கருதுவதாக தெரிவித்துள்ளார்.
Watch Jahnavi Mehta speak about our crucial picks & the #IPLAuction strategy! ?
— KolkataKnightRiders (@KKRiders) February 13, 2022
? @StarSportsIndia #KKR #AmiKKR #GalaxyOfKnights #TATAIPLAuction pic.twitter.com/1aqKplBl6L
அவரின் இதனை ஆண்டுகால அனுபவமும், இந்திய அணி மற்றும் ராஜஸ்தான் அணியில் கேப்டனாக செயல்பட்ட அனுபவமும் என அனைத்தும் எங்கள் அணிக்கு மிகுந்த உறுதுணையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
தொடக்க ஆட்டக்காரரான சுபம் கில்லை இழந்துள்ள நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் வெங்கடேஷ் ஐயருடன் இணைந்து அஜிங்யா ரஹானே சிறப்பாக செயல் ஆற்றுவார் என ஜஹனாவி மெஹதா தெரிவித்துள்ளார்.
மேலும் கொல்கத்தா அணியின் இந்த ஆண்டு யார் கேப்டன் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, அதை அணி நிர்வாகம் கூடி முடிவு செய்து விரைவில் அறிவிக்கும் என தெரிவித்தார்.
Welcome aboard, @ajinkyarahane88! ?#KKR #AmiKKR #GalaxyOfKnights #IPLAuction #TATAIPLAuction #AjinkyaRahane pic.twitter.com/Fhx00o4tMx
— KolkataKnightRiders (@KKRiders) February 13, 2022