'ஜெய் பீம்' கதையின் நிஜ 'செங்கேணி'க்கு நடிகர் சூர்யா நிதியுதவி
'ஜெய் பீம்' படக் கதையின் நிஜ நாயகியான பார்வதிக்கு ரூ.15 லட்சம் நிதியுதவியை நடிகர் சூர்யா வழங்கினார்.
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய்பீம் திரைப்படமானது 28 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது.
அப்படத்தில் வரும் 'செங்கேனி' கதாப்பாத்திரத்தின் உண்மையான பெயர் பார்வதி. அவர் இன்னுமும் குடிசை வீட்டில் வாழ்ந்து வருகிறார்.
யூ டியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தனது கதையை வைத்து கோடி கோடியாக சம்பாதிக்கும் சூர்யா இதுவரை எட்டிக்கூட பார்க்கவில்லை என்றும் உதவ முன்வரவில்லை எனவும் வேதனை தெரிவித்திருதார்.
அதனைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா பார்வதி அம்மாவிற்கு உதவும் விதமாக ரூ.10 லட்சம் வங்கி வைப்பு நிதியாக வழங்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை சென்னையில் ராஜாகண்ணுவின் மனைவி பார்வதியை நேரில் சந்தித்து ரூ.15 லட்சத்திற்கான காசோலையை நடிகர் சூர்யா வழங்கினார்.
தனது சார்பாக ரூ.10 லட்சமும், தனது திரைப்பட தயாரிப்பு நிறுவனமான 2D Entertainment-ன் சார்பாக ரூ.5 லட்சமும் வழங்கினார்.
Actor @Suriya_offl met #ParvathyAmmal today and handed over fixed deposit documents worth ₹15 lacs.
— Manobala Vijayabalan (@ManobalaV) November 16, 2021
₹10 lacs on his behalf & ₹5 lacs on behalf of 2D entertainment.#JaiBhim pic.twitter.com/9QL1FDjDim
இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நடிகர் சூர்யாவிற்கு நன்றி தெரிவித்தனர்.