தொடரும் 'ஜெய் பீம்' பட சர்ச்சை: சம்பளத்தை திருப்பிக் கொடுத்த வசன எழுத்தாளர்
சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'ஜெய் பீம்' திரைப்படம் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற ஒரு காலெண்டர் காட்சி குறிப்பிட்ட சமூகத்தினரிடையே கோபத்தை தூண்டியுள்ளது.
மேலும் பல காட்சிகளில் உள்ள குறியீடுகள் அச்சமூகத்தினரை தாக்கும் வகையில் அமைந்துள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனுமான நடிகர் சூர்யாவுக்கு அந்த சமூகத்தினரிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தற்போது, 'ஜெய் பீம்' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் என்னெவன்றால், வழக்குமொழியாக்க எழுத்தாளர் கண்மணி குணசேகரன் படத்துக்கான சம்பளத்தை திருப்பிக் கொடுத்துள்ளார்.
கண்மணி குணசேகரன் தனது முகநூல் பக்கத்தில் ஒரு நீண்ட செய்தியை எழுதி தனது வருத்தத்தை பகிர்ந்துள்ளார்.
அவரது பதிவின்படி, 'ஜெய் பீம்' பட இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இரண்டு வருடங்களுக்கு முன்பு கண்மணி குணசேகரனை அணுகி, வசனங்களில் நேட்டிவிட்டி டச் இருக்க வேண்டும் என்று தனது படத்திற்கான வசனங்களை எழுதும்படி கேட்டுக் கொண்டார். கண்மணி குணசேகரனும் வசனம் எழுதியிருந்தார்.
தற்போது சர்ச்சையாக மாறியுள்ள காலண்டர் காட்சிகள் குறித்து அவருக்கு தெரிவிக்கப்படவில்லை. மேலும், அவர் மொழியக்கத்திற்காக வேலை செய்தபோது படத்தின் தலைப்பு 'எலி வேட்டை' என்று இருந்ததாக கூறினார்.
அவரும் அதே சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இந்த செயலால் ஏமாற்றம் அடைந்ததாகவும், தற்போது படத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டாலும் அவரது உணர்வுகள் புண்பட்டுள்ளன என்று கூறினார்.
மேலும், படம் OTT-ல் வெளியானதால் டிஜே ஞானவேல் சர்ச்சைக்குரிய காட்சிகளை படத்தில் வைத்துள்ளார் மற்றும் இரண்டு சமூகங்கள் இடையே பெரும் விரோதத்தை தூண்டி விட்டுள்ளார் என கண்மணி குணசேகரன் கூறினார்.
இப்போது, தனது சொந்த சமூகத்தினரால் எழுப்பப்பட்ட அவர், ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார். இப்படத்தின் பிராந்திய மொழிபெயர்ப்புப் பணிக்காக வழங்கிய ரூ.50,000 காசோலையை தயாரிப்பாளரிடம் திரும்ப வழங்க கண்மணி குணசேகரன் முடிவு செய்த அவர், வருத்தம் தெரிவிக்கும் கடிததத்தையும் இணைத்து அனுப்பியுள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் இப்படி தூக்கி எறியும் துரோகிகளை சந்திக்க மாட்டேன் என நம்புவதாக கண்மணி குணசேகரன் கூறியுள்ளார்.