சட்ட விரோத புலம்பெயர்ந்தோருக்கு உதவியவருக்கு சிறை... அதிரடி நடவடிக்கையை துவக்கியது பிரித்தானியா
சட்ட விரோத புலம்பெயர்ந்தோருக்கு உதவினால் அபராதம் என நேற்றுதான் செய்தி வெளியானது. அதற்குள், சட்ட விரோத புலம்பெயர்ந்தோருக்கு உதவுவோருக்கு எதிரான நடவடிக்கைகளை பிரித்தானியா துவக்கிவிட்டதுபோலிருக்கிறது.
புலம்பெயர்ந்தோருக்கு வேலை ஏற்பாடு செய்துகொடுத்தவருக்கு சிறை
பிரித்தானியாவில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் புலம்பெயர்ந்தோருக்கு வீடு வாடகைக்கு விட்டாலோ, அவர்களை வேலைக்கு வைத்தாலோ கடும் அபராதம் விதிக்கப்படும் என நேற்று ஒரு செய்தி வெளியானது.
இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்பு சட்ட விரோத புலம்பெயர்ந்தோருக்கு வேலை ஏற்பாடு செய்துகொடுத்த ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக இன்று ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
HOME OFFICE
சட்ட விரோத புலம்பெயர்ந்தோருக்கு வேலை ஏற்பாடு செய்துகொடுத்தவர்
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு நகரைச் சேர்ந்த Mamadou Chune(55) என்பவர், துப்புறவுப் பணி ஒப்பந்ததாரர்களிடம் மேற்பார்வையாளராக பணியாற்றிவந்துள்ளார். அப்போது அவர், சட்ட விரோத புலம்பெயர்ந்தோரை பிரபல கடைகள் சிலவற்றில் துப்புறவுப் பணியாளர்களாக வேலைக்கு வைத்துள்ளார்.
Gambia நாட்டவரான Mamadou, 2006க்கும் 2016க்கும் இடையில் மேற்கு ஆப்பிரிக்க புலம்பெயர்ந்தோரை தனக்குச் சொந்தமான இடங்களில் தங்கவைத்துள்ளார்.
அவர் போலி அடையாளங்களை உருவாக்கியதாகவும் வங்கி அறிக்கைகளில் மோசடி செய்ததாகவும் கூறப்படுகிறது. அவர் சார்ந்த கூட்டம் ஒன்று இந்த புலம்பெயர்ந்தோரை பயன்படுத்தி 600,000 பவுண்டுகள் லாபம் பார்த்ததாகவும் உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
The Daily Star
கைது செய்யப்பட்ட Mamadouக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தொடர்புடைய Ebrima Jabang (50) என்பவர் நாட்டை விட்டே வெளியேறிவிட்டார். அவருக்கும் 23 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆக, முன்பு சட்ட விரோத புலம்பெயர்ந்தோருக்கு உதவியவர்களுக்கும் கிலியை ஏற்படுத்த பிரித்தானிய அரசு திட்டமிட்டுள்ளாற்போல் தெரிகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |