அமெரிக்காவில் 1 மில்லியன் டொலரை தாண்டும் ‘ஜெயிலர்’
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ திரைப்படம் இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும்.
தற்போது, ஜெயிலரின் படத்தின் மொத்த கால அளவுகள் படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.
‘ஜெயிலர்’
திரைப்படம் நடிகர் ரஜினிகாந்த் தற்போது கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகின்றார்.
இந்த திரைப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய பிரபலங்கள் நடிக்கின்றனர்.
த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
மேலும் இந்த படத்தின் முதல் பாடலான 'காவாலா' பாடல் மற்றும் இரண்டாவது பாடலான 'இது டைகரின் கட்டளை' பாடலும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த திரைப்படமானது நாளை வெளியாகவுள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இமையமலைக்கு சென்றுள்ளார்.
அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில்
மேலும் இத்திரைப்படமானது இப்படம் வெளியாவதற்கு முன்பே அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் $800K வசூலித்துள்ளதாக சமீபத்திய அப்டேட் தெரிவிக்கிறது.
In ALL Markets (Domestic and International), #Jailer is looking at a possible 2023 's No.1 Day 1 Opening record for a Tamil movie..
— Ramesh Bala (@rameshlaus) August 9, 2023
Currently, #Thunivu, #Varisu and #PS2 hold Opening day records in different markets for 2023..
இப்படம் 1 மில்லியன் டாலரை எட்டும் என வர்த்தக நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். இது நடந்தால் 1 மில்லியன் டொலரை வசூலித்த முதல் இந்திய படமாக இது காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |