Money Heist வெப்சிரீஸ் பார்க்க விடுமுறை வழங்கிய தனியார் நிறுவனம்! சமூகவலைத்தளத்தில் வைரலாகி வரும் பதிவு
உலக அளவில் புகழ் பெற்ற வெப் சீரீஸில் Money Heist எனப்படும் ஸ்பெனிஷ் மொழி வெப் சிரீஸின் பாகம் 5 செம்படம்பர் 3ம் திகதி வெளியாகவுள்ள நிலையில் தனியார் நிறுவனம் ஒன்று அவர்களது ஊழியர்களுக்கு விடுமுறையை அறிவித்துள்ள சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை மையமாக வைத்து இயங்கி வரும் வெர்வ் லாஜிக் என்ற நிறுவனம் "நெட்பிளிக்ஸ் அண்ட் சில் ஹாலிடே" என்று பெயரிட்டு அன்று ஊழியர்கள் மொத்தமாவே விடுமுறையை அறிவித்துள்ளது.
இதை அவர்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் விடுமுறையை எந்த நேரம் எப்படி கழிக்க வேண்டும் எனவும் ஒரு பதிவை செய்துள்ளனர்.
இந்த பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது. பலர் இது குறித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி பலர் இதை அவர்களது சிஇஓ பார்க்கும் வகை ஷேர் செய்யுங்கள் என பதிவிட்டு வருகின்றனர்.
Have Been Going Over the Love We have Received.!
— Verve Logic (@VerveLogic) August 30, 2021
Yes it is real and we are absolutely happy to announce an off on 3rd September naming it to be "Netflix & Chill Holiday" on the release of final season of #MoneyHeist @NetflixIndia- Please don't end this one! "Kehdo Ye Juth Hai"❤️ pic.twitter.com/M9RmFbZPOi