பள்ளியின் 4வது மாடியில் இருந்து குதித்த 9 வயது பள்ளி சிறுமி: வெளிவரும் பகீர் உண்மைகள்
ராஜஸ்தானில் 9 வயது பள்ளி சிறுமி உயிரிழந்த சம்பவத்தில் தனியார் பள்ளி நிர்வாகம் மீது கொடுமைப்படுத்துதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
உயிரை மாய்த்துக் கொண்ட 9 வயது சிறுமி
கடந்த நவம்பர் 1ம் திகதி அமய்ரா என்ற 9 வயது சிறுமி ஜெய்ப்பூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் நான்காவது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், சிறுமி அமய்ராவின் தாய் ஷிவானி தன்னுடைய மகள் பள்ளியில் உள்ள சில சிறுவர்களால் தொடர்ந்து கேலி செய்யப்பட்டு வந்ததாகவும். இது தொடர்பாக பல முறை ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்து அவர்கள் நடவடிக்கை எடுக்காததால் தன்னுடைய மகளின் உயிர் பறிபோய் விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
சம்பவம் நடைபெற்ற தினத்தில் கூட, அமய்ரா தான் கொடுமைப்படுத்தப்படுவது குறித்து ஆசிரியரிடம் புகார் அளிக்க சென்றதை சிசிடிவி காட்சிகள் விளக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சிறுமியின் மாமா வழங்கிய தகவலில், அமய்ரா தான் கொடுமைப்படுத்தப்படுவதாக சம்பவத்தன்று இரண்டு முறை புகார் அளித்ததை ஆசிரியர் ஒப்புக் கொண்டதாகவும், அதற்கு “போய் தன்னுடைய இருக்கையில் அமரும் படி மட்டுமே அவர் தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பள்ளி நிர்வாகம் மீது FIR
தீர்க்கப்படாத கொடுமைப்படுத்துதல் தொடர்பாக பள்ளி நிர்வாகம் மீது குற்றம் சுமத்தப்பட்டு FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பள்ளி நிர்வாகம் சிறுமி உயிரிழப்பு தொடர்பான ஆதாரங்களை அழிக்க முயன்று வருவதாக பெற்றோர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
மேலும் நியாயமான விசாரணையை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |