இலங்கை ஜனாதிபதியுடன் சந்திப்பு! தமிழ், சிங்களத்தில் டுவிட் செய்த இந்திய அமைச்சர்
இலங்கையின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை சென்று இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேசினார்.
இதுகுறித்த தகவல்களை அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ் மற்றும் சிங்களத்தில் டுவிட் செய்துள்ளார்.
இதுகுறித்து,
ஜனாதிபதி அதி மேதகு கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்ததையிட்டு மகிழ்வடைகின்றேன்.
நமது நெருக்கமான அயலுறவின் பல்வேறு பரிமாணங்கள் குறித்து மீளாய்வு செய்யப்பட்டது.
இந்தியாவின் தொடர்ச்சியான புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பு குறித்தும் அவரிடம் உறுதியளிக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி அதி மேதகு கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்ததையிட்டு மகிழ்வடைகின்றேன்.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) March 28, 2022
நமது நெருக்கமான அயலுறவின் பல்வேறு பரிமாணங்கள் குறித்து மீளாய்வு செய்யப்பட்டது.
இந்தியாவின் தொடர்ச்சியான புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பு குறித்தும் அவரிடம் உறுதியளிக்கப்பட்டது. https://t.co/xT2LYzU0x9
நிதி அமைச்சர் கௌரவ பசில் ராஜபக்ஷ அவர்களுடனான சந்திப்புடன் விஜயம் ஆரம்பம்.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) March 28, 2022
பொருளாதார நிலை தொடர்பாகவும் இந்தியாவின் ஆதரவான பதில் நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. அயலுறவுக்கு முதலிடம் கொள்கைமூலம் நாம் தொடர்ந்து வழிநடத்தப்படுவோம். https://t.co/nB18RASdo8
அன்புநிறைந்த வரவேற்பிற்காக பிரதமர் மாண்புமிகு மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு நன்றி.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) March 28, 2022
எமது சந்திப்பினை அடுத்து முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன:
1. இந்தியாவால் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணக் கலாசார நிலையம் மெய்நிகர் மார்க்கமூடாக திறந்து வைக்கப்பட்டது. https://t.co/dtKLpRYRaZ