இந்திய வெளிவிவகார அமைச்சருடன் ஜேர்மனி பாதுகாப்பு ஆலோசகர் முக்கிய ஆலோசனை
ஜேர்மனியின் பாதுகாப்பு ஆலோசகரான ஜென்ஸ் பிளாட்னர், இந்திய வெளிவிவகார அமைச்சருடன் ஆலோசனை நடத்தினார்.
ஜேர்மனி - இந்தியா உறவு
இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஜேர்மனி மற்றும் இந்திய இடையே பொதுவான ஜனநாயக கொள்கையின்படி இருதரப்பு உறவுகள் உருவாக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து இரு நாடுகளும் பரஸ்பரம் வளர்ச்சி திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், ஜேர்மனி ஜனாதிபதியின் பாதுகாப்பு கொள்கை ஆலோசகர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜென்ஸ் பிளாட்னர், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
ஜெய் சங்கர் ட்விட்டர் பதிவு
அதனைத் தொடர்ந்து அந்த சந்திப்பு குறித்து ஜெய் சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 'ஜேர்மனி ஜேர்மனி ஜனாதிபதியின் பாதுகாப்பு கொள்கை ஆலோசகர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜென்ஸ் பிளாட்னரை இன்று சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்த சந்திப்பில் இரு நாடுகளின் விரிவான செயல் திட்ட நல்லுறவு பற்றி ஆலோசிக்கப்பட்டது. இந்தோ-பசிபிக் மற்றும் ஐரோப்பிய பகுதிகளின் சூழ்நிலை பற்றிய இரு நாடுகளின் பார்வைகளையும் நாங்கள் பகிர்ந்து கொண்டோம்' என தெரிவித்துள்ளார்.
Glad to meet Foreign and Security Policy Advisor to German Chancellor Jens Plötner today.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) February 13, 2023
Discussed our expanding strategic partnership and exchanged views on the situation in Europe and the Indo-Pacific. pic.twitter.com/Iw0e27vQYU
உக்ரைனில் போரினால் ஏற்பட்டுள்ள மனிதநேய நெருக்கடி சார்ந்த சூழல் குறித்து இரு நாடுகளும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.