சிக்ஸர்களை பறக்கவிட்டு சதம் விளாசிய ஜெய்ஸ்வால்! அவுட் ஆகாமல் அடுத்த சில நிமிடத்தில் வெளியேற்றம்
இந்திய அணி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இன்று 3வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார்.
ராஜ்கோட்டில் நடந்து வரும் டெஸ்டில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை ஆடி வருகிறது. ரோகித் சர்மா 19 ஓட்டங்களில் அவுட் ஆன நிலையில், தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal) அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்.
அவர் சிக்ஸர், பவுண்டரிகள் என பறக்கவிட்டு சதம் அடித்தார். இது அவரது 3வது டெஸ்ட் சதம் ஆகும். மேலும், அதிவேகமாக டெஸ்டில் மூன்று சதங்கள் விளாசிய சேவாக் மற்றும் சஞ்சய் மஞ்சரேக்கருடன் ஜெய்ஸ்வால் இணைந்தார்.
A leap of joy to celebrate his second century of the series ?
— BCCI (@BCCI) February 17, 2024
Well played, Yashasvi Jaiswal ??#TeamIndia | #INDvENG | @ybj_19 | @IDFCFIRSTBank pic.twitter.com/pdlPhn5e3N
133 பந்துகளை எதிர்கொண்ட ஜெய்ஸ்வால் 5 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 104 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது முதுகுவலியால் பாதிக்கப்பட்டார்.
இதனால் அவர் retired hurt முறையில் பாதியில் பெவிலியன் திரும்பினார். அவர் சுப்மன் கில்லுடன் இணைந்து அவர் 165 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.
நிதானமாக ஆடிய சுப்மன் கில் அரைசதம் அடித்தார். 23வது டெஸ்டில் ஆடும் அவருக்கு இது 5வது அரைசதம் ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |