முதல் ஓவரிலேயே 20 ஓட்டங்கள்! ஐபிஎல்லில் வெறியாட்டம் ஆடிய 21 வயது வீரர்
டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், ராஜஸ்தான் அணி வீரர் ஜெய்ஸ்வால் முதல் ஓவரிலேயே 20 ஓட்டங்கள் விளாசியுள்ளார்.
இளம்வீரர் ஜெய்ஸ்வால்
கவுகாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி தொடங்கியுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி ராஜஸ்தான் அணியில் பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
முதல் ஓவரை இடக்கை வேகப்பந்து வீச்சாளரான கலீல் அகமது வீசினார். அவரது ஓவரை எதிர்கொண்ட 21 வயது இளம்வீரர் ஜெய்ஸ்வால், முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார்.
ஐந்து பவுண்டரிகள்
அதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு பவுண்டரிகளை விளாசிய அவர், ஓவரின் 5வது மற்றும் 6வது பந்துகளையும் பவுண்டரிகளாக மாற்றினார்.
மொத்தம் 5 பவுண்டரிகள் விளாசியதன் மூலம் ராஜஸ்தான் அணிக்கு முதல் ஓவரிலேயே 20 ஓட்டங்கள் கிடைத்துள்ளது. இளம் வீரரின் அதிரடி ஆட்டத்தினால் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.
Halla Bol from Over one pic.twitter.com/zX2k8hsAxI
— Rajasthan Royals (@rajasthanroyals) April 8, 2023