235 ரன் இலக்கை 17.3 ஓவரிலேயே எட்டிய மும்பை! அடித்து நொறுக்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால்
சையத் முஷ்தாக் அலி தொடரில் மும்பை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹரியானாவை வீழ்த்தியது.
அங்கித் குமார் 89 ஓட்டங்கள்
புனேயில் நடந்த போட்டியில் மும்பை மற்றும் ஹரியானா அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய ஹரியானா அணியில் அர்ஷ் ரங்கா 26 ஓட்டங்களில் வெளியேற, அங்கித் குமார் மற்றும் நிஷாந்த் சிந்து கூட்டணி வாணவேடிக்கை காட்டியது. 
அரைசதம் விளாசிய அணித்தலைவர் அங்கித் குமார் (Ankit Kumar) 42 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 89 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
கடைசிவரை களத்தில் நின்ற நிஷாந்த் சிந்து (Nishant Sindhu) 38 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 63 ஓட்டங்கள் விளாச, ஹரியானா அணி 234 ஓட்டங்கள் குவித்தது.
அடுத்து களமிறங்கிய மும்பை அணியில் ரஹானே 21 (10) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ருத்ர தாண்டவம் ஆடினார்.
அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த சர்ப்பராஸ் கானும் அதிரடியில் மிரட்ட, மும்பை அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. சர்ப்பராஸ் கான் (Sarfaraz Khan) 25 பந்துகளில் 3 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 64 ஓட்டங்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் ருத்ர தாண்டவம்
பின்னர் வந்த ரகுவன்ஷி (7), சூர்யன்ஷ் (13), ஷர்துல் தாக்கூர் (2) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் நடையைக்கட்ட, ஜெய்ஸ்வால் எதிரணி பந்துவீச்சை நொறுக்கினார்.
48 பந்துகளில் சதம் விளாசிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal) 101 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அவரது ஸ்கோரில் 1 சிக்ஸர், 16 பவுண்டரிகள் அடங்கும்.
18வது ஓவரில் சமந் ஜாக்கர் சிக்ஸர், பவுண்டரி விரட்ட மும்பை அணி 238 ஓட்டங்கள் எடுத்து இமாலய இலக்கை எட்டி மிரட்டியது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |