மீண்டும் கலக்கிய ஜெய்ஸ்வால்..கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய ரோகித் சர்மா
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது டெஸ்டில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 80 ஓட்டங்கள் எடுத்தார்.
டிரினிடாட் டெஸ்ட்
இந்தியா - மேற்கிந்திய தீவுகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் டிரினிடாட்டில் தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்ற மே.தீவுகள் பந்துவீச்சை தெரிவு செய்தது.
அதன்படி இந்திய அணி களமிறங்கியது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 139 ஓட்டங்கள் குவித்தது.
அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் 74 பந்துகளில் 57 ஓட்டங்கள் விளாசினார். இதில் ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகள் அடங்கும். முதல் டெஸ்டில் ஜெய்ஸ்வால் 171 ஓட்டங்கள் குவித்திருந்தார்.
Twitter/BCCI
ரோகித் சர்மா 80
அவரது விக்கெட்டைத் தொடர்ந்து, அரைசதம் கடந்திருந்த கேப்டன் ரோகித் சர்மா 143 பந்துகளில் 2 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 80 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
கடந்த டெஸ்டில் சதம் விளாசிய ரோகித், இந்த டெஸ்டிலும் கேப்டன் இன்னிங்ஸ் ஆடி தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். அதன் பின்னர் வந்த ரஹானே 8 ஓட்டங்களிலும், கில் 10 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து நடையைக் கட்டினர்.
எனினும் விராட் கோலி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவருடன் ரவீந்திர ஜடேஜா இணைந்துள்ளார்.
It's Tea on Day 1 of the 2nd Test! #TeamIndia move to 182/4, adding 61 runs in the Second Session!
— BCCI (@BCCI) July 20, 2023
We will be back for the Final Session of the Day soon. ⌛️
Scorecard ▶️ https://t.co/d6oETzoH1Z#WIvIND pic.twitter.com/1DzzlANxVn
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |