இங்கிலாந்துக்கு எதிராக 214 ரன் அடித்து சரித்திர வெற்றி! நன்றி தெரிவித்த சாதனை நாயகன் ஜெய்ஸ்வால்
இந்திய கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது எக்ஸ் பக்கத்தில் தமது அணிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இமாலய வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி 434 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 236 பந்துகளில் 12 சிக்ஸர் மற்றும் 14 பவுண்டரிகளுடன் 214 ஓட்டங்கள் விளாசினார்.
@AFP
இதன்மூலம் அவர் பல்வேறு சாதனைகளை படைத்தார். அவருக்கு இங்கிலாந்தின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
நன்றி
இந்த நிலையில் ஜெய்ஸ்வால் தனது எக்ஸ் பக்கத்தில் ஆதரவு அளித்த தமது அணிக்கு நன்றி கூறியுள்ளார்.
@AFP
அதில், 'இங்கிலாந்துக்கு எதிராக இரட்டை சதம் அடித்து பரபரப்பு வெற்றி! அர்ப்பணிப்பு உண்மையிலேயே ஈவுத்தொகையை செலுத்துகிறது. இருப்பினும் இதுபோன்ற தருணங்கள் முயற்சியை உண்மையாக உறுதிப்படுத்துகின்றன. ஆதரவுக்கு மிக்க நன்றி மற்றும் குழு மனப்பான்மையே வெற்றிக்கு வழி வகுத்தது' என தெரிவித்துள்ளார்.
A double century and a sensational win against England! Dedication truly pays dividends, yet it's moments like these that truly validate the effort. Immensely thankful for the support and the team spirit that paved the way to success. ????#TeamIndia #INDvENG #YBJ64 pic.twitter.com/LWWOV6ThXd
— Yashasvi Jaiswal (@ybj_19) February 19, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |