சிக்ஸர்மழை பொழிந்து மும்பை இந்தியன்ஸை நொறுக்கிய 22 வயது வீரர்! அதிர்ந்த மைதானம் (வீடியோ)
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரர் ஜேக் ஃபிரேசர் 27 பந்தில் 84 ஓட்டங்கள் விளாசினார்.
ருத்ர தாண்டவம்
அருண் ஜெய்ட்லீ மைதானத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டி நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி டெல்லி அணி முதலில் களமிறங்கியது.
22 வயது இளம் வீரரான ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் ருத்ர தாண்டவம் ஆடினார். மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சாளர்களின் ஓவரை நாலாபுறமும் சிதறடித்த அவர், 15 பந்துகளில் அரைசதம் விளாசினார்.
.@delhicapitals' Flying Powerplay ?
— IndianPremierLeague (@IPL) April 27, 2024
Fraser-McGurk increases the temperature with some explosive stroke play ?
Watch the match LIVE on @JioCinema and @StarSportsIndia ??#TATAIPL | #DCvMI pic.twitter.com/e2VdyReaPu
அதிவேக அரைசதம்
இது நடப்பு சீசனில் அவர் இரண்டாவது முறையாக அடித்த அதிவேக அரைசதம் ஆகும். மேலும் இருமுறை அதிவேக அரைசதம் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் ஜேக் பெற்றார்.
மொத்தம் 27 பந்துகளை சந்தித்த ஜேக் 6 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 84 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் ஹர்திக் பாண்டியா 2 ஓவர்கள் வீசி 41 ஓட்டங்களை வாரி வழங்கினார்.
தற்போது வரை டெல்லி அணி 10 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 128 ஓட்டங்கள் குவித்துள்ளது.
Enjoying the Fraser-McGurk show ?
— IndianPremierLeague (@IPL) April 27, 2024
A 1️⃣5️⃣ ball 5️⃣0️⃣ for the dashing opener as he equals his own record for the fastest fifty of the season ?
Follow the Match ▶️ https://t.co/BnZTzctcaH#TATAIPL | #DCvMI pic.twitter.com/hcnAwGhbg9
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |