அவுஸ்திரேலிய உலகக்கிண்ண அணியில் ரிசர்வ் வீரராக சிக்ஸர் மன்னன்!
ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க், மேட் ஷார்ட் இருவரும் ரிசர்வ் வீரர்களாக அவுஸ்திரேலிய உலகக்கிண்ண அணியில் இடம்பெற்றுள்ளனர்.
ரிசர்வ் வீரர்கள்
டி20 உலகக்கிண்ண தொடரில் விளையாட உள்ள 15 பேர் கொண்ட அவுஸ்திரேலிய அணியுடன், 2 ரிசர்வ் வீரர்களுடன் இறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 1ஆம் திகதி மிட்செல் மார்ஷ் தலைமையிலான 15 பேர் கொண்ட அவுஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது. ஐபிஎல் தொடர் முடிந்த பின்னர் கம்மின்ஸ், கிரீன், ஹெட் ஆகிய வீரர்கள் சொந்த நாட்டு அணிக்கு திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
Introducing our 15-player squad for the ICC Men’s T20 World Cup to head to the West Indies - led by our new full-time T20 skipper, Mitch Marsh ?
— Cricket Australia (@CricketAus) May 1, 2024
Congratulations to those selected ?#T20WorldCup pic.twitter.com/vETFIGPQL6
இந்த நிலையில், 2 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள இளம் வீரரான ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க் மற்றும் மேத்யூ ஷார்ட் (9 டி20 போட்டிகளில் விளையாடியவர்) ரிசர்வ் வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஜார்ஜ் பெய்லி
இவர்களில் ஃப்ரேசர் மெக்கர்க் ஐபிஎல் தொடரில் சிக்ஸர்களை பறக்கவிட்டு, மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் ஆவார்.
அவுஸ்திரேலிய தேர்வாளர்கள் தலைவர் ஜார்ஜ் பெய்லி கூறுகையில், ''ஃப்ரேசர் மெக்கர்க் மற்றும் ஷார்ட் தேர்வுக்காக நிர்பந்தமான வழக்குகளை உருவாக்கினர். மேலும், போட்டியின்போது அணி உறுப்பினர்கள் வெளியேறினால் போதுமான பாதுகாப்பை வழங்கினர்.
போட்டி தொடரின்போது Fixtures இடையில் உள்ள குறுகிய திருப்பமாக காயம் ஏற்பட்டால், குறுகிய அறிவிப்பில் வீரர்களைப் பெறுவது சவாலானது. எனவே, ஆல்ரவுண்டர் திறனை மேட் வழங்குகிறார், அதே நேரம் ஜேக் துடுப்பாட்டத்தை பார்த்துக்கொள்வார்.
இருவரும் அற்புதமான திறமைகளை கொண்டவர்கள். தேவைப்பட்டால் அணியில் சேர்க்கலாம். இல்லையெனில், சர்வதேச அளவில் அந்தந்த வளர்ச்சி பயணங்களில் அனுபவம் இன்னும் மதிப்புமிக்கதாக இருக்கும்'' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |