கனடாவில் இரவு நேரத்தில் கொலை செய்யப்பட்ட 14 வயதான புலம்பெயர்ந்த சிறுமி! வெளிவரும் பின்னணி
கனடாவில் சுட்டு கொல்லப்பட்ட ஜமைக்கா நாட்டை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றுள்ளது.
ஜமைக்காவில் பிறந்து பின்னர் கனடாவுக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தவர் 14 வயதான Taffash Riley. இவர் Mississaugaவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டின் படிக்கட்டில் நடந்து வந்த போது கடந்த செவ்வாயன்று மர்மமான முறையில் சுட்டு கொல்லப்பட்டார்.
இரவு 9 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில் கொலை நடந்ததற்கான சூழ்நிலைகள் மற்றும் காரணம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
இதனிடையில் சிறுமி வசித்த வீட்டின் அருகே வசிக்கும் நபர்கள் சேர்ந்து நினைவஞ்சலி கூட்டம் நடத்தினார்கள். அப்போது Taffash புகைப்படங்கள் முன் மெழுகுவர்த்தி மற்றும் பூக்கள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனிடையில் Taffash உடலை சொந்த நாட்டுக்கு கொண்டு செல்லவும் குடும்பத்தினர் விரும்புகின்றனர். ஆனால் அதற்கு அதிகளவில் செலவாகும் என்பதால் சாத்தியப்படுமா என்பது தெரியவில்லை.
இந்த நிலையில் இந்த கொலை தொடர்பில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் வராதது பாதுகாப்பு குறித்து கவலையை எற்படுத்தியுள்ளது எனவும், விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என நம்புவதாகவும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.