இந்திய அணி வீரரை தேவையின்றி களத்தில் சீண்டிய ஆண்டர்சன்! அவர் கொடுத்த தரமான பதிலடி... வைரலாகும் வீடியோ
இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் சிராஜை, இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கடுப்பில் சீண்டிய நிலையில், அதற்கு சிராஜ் பதிலடி கொடுத்த வீடியோ வைரலாகியுள்ளது.
இந்த போட்டியில் ஆட்டத்தின் 84 ஓவரை கடைசி பந்தில் சிராஜிற்கு, ஆண்டர்சன் பந்துவீசினார். அவர் வீசிய கடைசி பந்தை சிராஜ் அடிக்க முற்பட்டு கீப்பரிடம் பந்து சென்றது.
ஆனால், பந்து பேட்டில் படவில்லை. இதனைத் தொடர்ந்து கோபமடைந்த ஆண்டர்சன் சிராஜின் அருகில் சென்று கடுமையான சில வார்த்தைகளை கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
இது சிராஜுக்கு கோபத்தை ஏற்படுத்த அவர் உடனடியாக ஆண்டர்சனின் மேல் மோதி பதில் வார்த்தைகளை கொடுத்தார். அவர்கள் இருவருக்கு ஏற்பட்ட அந்த வாய் சண்டை குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Mohammed Siraj sledging Jimmy Anderson ? #ENGvsIND #Anderson #KLRahul pic.twitter.com/YlnVLPyPxP
— Ashwani Pratap Singh (@Ashwani45singh) August 6, 2021
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர்களின் பட்டியலில் நேற்று ஆண்டர்சன் 3வது இடத்திற்கு முன்னேறினார்.
அப்படிபட்ட தலைசிறந்த சீனியர் பந்து வீச்சாளர் இந்திய வீரர்களை கோபப்படுத்தி அவர்களின் கவனத்தை திசைத்திருப்பியது கேவலமான செயல் என ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.