ஆண்டர்சனிடம் மன்னிப்பு கேட்க முயன்றும் பும்ராவை அலட்சியப்படுத்திவிட்டனர்! உண்மையை உடைத்த இந்திய பயிற்சியாளர்
இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் போட்டியில் நடந்த ஒரு விடயத்துக்கு பின் ஆண்டர்சனிடம் பும்ரா மன்னிப்பு கேட்க முயன்ற போது அவர் அதை அலட்சியப்படுத்தினார் என இந்திய பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
இதுதான் இந்திய அணியை எழுச்சி பெறச் செய்ததற்குக் காரணம் என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ரவிச்சந்திரன் அஸ்வினின் யூ டியூப் சேனலில் ஆர்.ஸ்ரீதர் கூறும்போது, பும்ரா ஒரு சவாலான வேகப்பந்து வீச்சாளர் யாரையும் வேண்டுமென்றே காயப்படுத்த மாட்டார். பும்ரா அந்த ஓவரில் 8-10 பந்துகளை வீசினார். யார்க்கர்கள் பவுன்சர்கள், ஆண்டர்சன் உடலில் கிளவ்வில், கையில் ஹெல்மெட்டில் அடி வாங்கினார், ஆனால் விக்கெட்டைக் கொடுக்கவில்லை.
முன்பெல்லாம் டெய்ல் எண்டர்க்ளுக்கு பவுன்சர் வீசக்கூடாது என்பது ஒரு எழுதப்படாத ஒப்பந்தமாக இருந்தது, இப்போது அதெல்லாம் இல்லை. ஃபுல் லெந்த் வீசி விக்கெட் எடுத்துக் கொள் என்பதே அந்த எழுதா உடன்படிக்கை. இது ஒரு புரிதல்தான்.
ஆட்டம் முடிந்த பிறகு இரு அணி வீரர்க்ளும் ஓய்வறைக்குத் திரும்பிய போது ஜிம்மி ஆண்டர்சனின் முதுகில் செல்லமாகத் தட்டி பும்ரா வேண்டுமென்றே செய்யவில்லை என்று கூற முனைந்தார்.
பும்ரா அங்கேயே மன்னிப்புக் கேட்டு முடிக்கப்பார்த்தார், ஆனால் ஆண்டர்சன் அவரை அலட்சியப்படுத்தி ஒதுக்கினார். இதுதான் அனைவரையும் இந்திய அணியில் தட்டி எழுப்பியது. இதற்கு முன் இந்திய அணி ஒன்று திரண்டு எழுந்ததில்லை என்று அர்த்தமல்ல.
பும்ராவை ஆண்டர்சன் அலட்சியப்படுத்தியது அனைவரின் உள்ளிலும் தீயை மூட்டியது. அதன் விளைவைத்தான் 5ம் நாளில் பார்த்தோம் என கூறியுள்ளார்.