இந்திய அணியை கதறவிட்டு ஜெயித்த கையோடு புதிய சாதனை படைத்த ஆண்டர்சன்! ஜாம்பவான் முரளிதரனுக்கு அடுத்த இடத்தை பிடித்தார்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் அண்டர்சன் சொந்த மண்ணில் 400 ஆவது டெஸ்ட் விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 76 ஓட்டங்களுடன் அபார வெற்றியை பெற்றது.
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்கிஸில் மூன்று விக்கெட்டுகளையும் மூன்றாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி ஜேம்ஸ் ஆண்டர்சன் சொந்த மண்ணில் 400 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
இதன் மூலம் சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் வரிசையில் இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரனுக்கு அடுத்த இடத்தை ஆண்டர்சன் பிடித்துள்ளார்.
சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய டாப் 3 பந்துவீச்சாளர்கள்
முத்தையா முரளிதரன் (இலங்கை) -73 - 493
ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து) - 94- 400
அனில் கும்பிளே (இந்தியா) - 63- 350