பிரித்தானிய இளவரசியிடம் உயரிய விருது பெற்ற ஜாம்பவான்
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன், விண்ட்சர் கோட்டையில் இளவரசி அன்னேயிடம் இருந்து உயரிய விருது பெற்றார்.
ஜேம்ஸ் ஆண்டர்சன்
பிரித்தானியாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்கின் ராஜினாமா கௌரவப் பட்டியலில் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இடம்பிடித்தார். 
இந்த நிலையில், விண்ட்சர் கோட்டையில் இளவரசி அன்னேயிடம் இருந்து Knighthood எனும் விருதினை ஜேம்ஸ் ஆண்டர்சன் (James Anderson) பெற்றார். 
43 வயதாகும் ஆண்டர்சன், இங்கிலாந்து கிரிக்கெட்டில் ஆற்றிய சேவைகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
அன்னேயிடம் விருது
இங்கிலாந்து அணிக்காக 188 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 704 விக்கெட்டுகளை வீழ்த்தி மாபெரும் சாதனையை ஆண்டர்சன் படைத்திருந்தார். 
இளவரசி அன்னேயிடம் இருந்து விருதினை பெற்றதால் ஆண்டர்சனுக்கு ஒரு சிறப்பான நாள் இது என்று லன்காஷயர் புகைப்படத்துடன் பதிவிட்டது.
தகவல்களின்படி, ஜேம்ஸ் ஆண்டர்சன் லான்காஷயருடன் ஒரு வருட ஒப்பந்த நீட்டிப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |