முத்தையா முரளிதரன், வார்னேவுக்கு பின் 700 விக்கெட்! புதிய வரலாறு படைத்த ஆண்டர்சன்
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்டில் 700 விக்கெட்டுகள் வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான 5வது டெஸ்டின் 3வது நாளில் இங்கிலாந்து அணி ஆடி வருகிறது. நேற்றைய தினம் 8 விக்கெட்டுக்கு 473 ஓட்டங்கள் எடுத்திருந்த இந்திய அணி இன்று ஆட்டத்தை தொடர்ந்தது.
ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய பந்தில் குல்தீப் யாதவ், விக்கெட் கீப்பர் பென் ஃபோக்சிடம் கேட்ச் கொடுத்து 30 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
Another jewel in the crown of James Anderson ?
— ICC (@ICC) March 9, 2024
➡️ https://t.co/NclpXwxcNa
#WTC25 | #INDvENG pic.twitter.com/JV12NGobAB
இது ஆண்டர்சனின் 700வது டெஸ்ட் விக்கெட் ஆகும். இதன்மூலம் இந்த மைல்கல்லை எட்டிய முதல் இங்கிலாந்து பந்துவீச்சாளர் மற்றும் சர்வதேச அளவில் 3வது வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
Murali, Warne, and now James Anderson 7⃣0⃣0⃣ pic.twitter.com/l0zUYuZtL6
— ESPNcricinfo (@ESPNcricinfo) March 9, 2024
அடுத்து பஷீர் பந்துவீச்சில் பும்ரா (20) ஆட்டமிழக்க, இந்திய அணி 477 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
சோயிப் பஷீர் 5 விக்கெட்டுகளும், ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஹார்ட்லே தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |