சச்சினுக்கு அடுத்த இடத்தை பிடித்து சாதனை படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன்! குவியும் வாழ்த்துக்கள்
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டல்கருக்கு அடுத்த இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, அங்கு ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கிடையே மூன்று போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் விளையாடியதன் மூலம் மிகப் பெரிய சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம், அவர் 169-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. அதிக டெஸ்ட் போட்டிகள் விளையாடிய வீரர்களின் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் 200 போட்டிகள் விளையாடியுள்ளார்.
இதற்கு அடுத்தபடியாக அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர்களான ரிக்கி பாண்டிங் மற்றும் ஸ்டீவ் வாக் ஆகியோர் 168 போட்டிகள் விளையாடியிருந்தனர்.
தற்போது ஜேம்ஸ் ஆண்டர்சன் 169-வது போட்டிகள் விளையாடியுள்ளதால், இரண்டாவது இடத்தை பிடித்து, டெஸ்ட் போட்டிகளில் அதிகம் போட்டிகள் விளையாடிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அவருக்கு சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.