இப்படி பந்து போட்டா? பும்ராவிடம் கடும் கோபத்தை வெளிப்படுத்திய ஜேம்ஸ் ஆண்டர்சன்: வெளியான வீடியோ
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஜேம்ஸ் ஆண்டர்சன், பும்ராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 364 ஓட்டங்கள் குவிக்க, அதன் பின் இங்கிலாந்து அணி ஜோ ரூட்டின்(180) அபார ஆட்டத்தால் 391 ஓட்டங்களுக்குல் ஆல் அவுட் ஆனது.
இதைத் தொடர்ந்து நான்காம் நாளான இன்று இரண்டாவது இன்னிங்ஸ் ஆடி வரும் இந்திய அணி சற்று முன் வரை 3 விக்கெட் இழப்பிற்கு 68 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.
ரஹானே மற்றும் புஜாரா இருவரும் 8 ஓட்டங்களுடன் களத்தில் ஆடி வருகின்றனர். இந்நிலையில், இப்போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரிட் பும்ரா விக்கெட் எடுக்கவேயில்லை.
இதனால் கடும் விரக்தியில் இருந்த பும்ரா அந்த கோபத்தை எல்லாம், கடைசி கட்டத்தில் பேட்டிங் ஆட வந்த ஜேம்ஸ் ஆண்டர்சனிடம் காட்டினார் என்று கூறலாம்.
ஏனெனில் அவர் பேட்டிங் செய்த போது, பும்ரா தன்னுடைய பவுன்சர் பந்து வீச்சின் மூலம் ஜேம்ஸ் ஆண்டர்சனை மிரட்டினார். குறிப்பாக அதில் ஒரு பந்து அவரது ஹெல்மட்டை தாக்கியது, சில பந்து அவரது உடலை தாக்குவது போன்று மிரட்டியது.
இதனால் கடைசி விக்கெட்டாக ஷமி பந்து வீச்சில் அவுட்டான ஆண்டர்சன் பவுலியன் திரும்பும் போது, பும்ராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
மேலும், இப்போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் பும்ரா ஒரே ஓவரில் நான்கு நோ பால் வீசி ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.