38 பந்துகளில் அரைசதம் விளாசிய ஸ்மித்! 21 ஓவரில் 150 ஓட்டங்கள்..புரட்டியெடுக்கும் இங்கிலாந்து
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தின் ஜேமி ஸ்மித் அதிரடி அரைசதம் அடித்தார்.
ஜேமி ஸ்மித்
இங்கிலாந்து மற்றும் தென் ஆஃப்ரிகா அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி தி ரோஸ் பவுல் மைதானத்தில் நடந்து வருகிறது.
Watching Jamie Smith drive 😮💨 pic.twitter.com/uKhHgfP6D2
— England Cricket (@englandcricket) September 7, 2025
நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி இங்கிலாந்தின் ஜேமி ஸ்மித், பென் டக்கெட் துடுப்பாட்டத்தை தொடங்கினர்.
பென் டக்கெட் 33 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 31 ஓட்டங்கள் எடுத்து போஷ் ஓவரில் அவுட் ஆனார். அடுத்து ஜோ ரூட் களமிறங்கி நிதானமாக ஆட, ஜேமி ஸ்மித் (Jamie Smith) அதிரடி ஆட்டத்தில் மிரட்டினார்.
அவர் 38 பந்துகளில் தனது மூன்றாவது அரைசதத்தை பதிவு செய்தார். மொத்தம் 48 பந்துகளை எதிர்கொண்ட ஜேமி ஸ்மித் ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 62 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
அவரது அதிரடி மூலம் இங்கிலாந்து அணி 21வது ஓவரிலேயே 150 ஓட்டங்களை எட்டியது.
Setting the tone at the top! 👊@IGCom | 🏴 #ENGvSA 🇿🇦 pic.twitter.com/SdRa0Bnoqu
— England Cricket (@englandcricket) September 7, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |