குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலமான நாவல்பழ சட்னி.., எப்படி செய்வது?
சமீபத்தில் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளரான நந்தகுமார் நாவல் பழத்தை பயன்படுத்தி சட்னி செய்திருந்தார்.
அதைப் பார்த்த நடுவர் ரங்கராஜ் தனது கேட்டரிங் சர்வீஸில் இனி நாவல்பழ சட்னியை அறிமுகப்படுத்த இருப்பதாக புகழ்ந்திருந்தார்.
அந்தவகையில், இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட சுவையான நாவல்பழ சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- நாவல் பழம்- 10
- துருவிய தேங்காய்- ½ கப்
- பச்சை மிளகாய் - 2
- கொத்தமல்லி- சிறிதளவு
- புளி- சிறிதளவு
- மிளகு- 1ஸ்பூன்
- சீரகம்- 1 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- 1 ஸ்பூன்
- கடுகு- ¼ ஸ்பூன்
- உளுந்து- ¼ ஸ்பூன்
- கறிவேப்பிலை- 1 கொத்து
செய்முறை
முதலில் நாவல் பழங்களை எடுத்து தண்ணீரில் நன்றாக கழுவி அதன் விதையை அகற்றிக்கொள்ளவும்.
பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் நாவல் பழம், தேங்காய், பச்சை மிளகாய், கொத்தமல்லி, புளி, மிளகு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
அடுத்து இதனை ஒரு கிண்ணத்தில் மாற்றி அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துகொள்ளவும்.
இறுதியாக அடுப்பில் ஒரு தாளிப்பு கடாய் சிதைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு , உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டினால் சுவையான நாவல்பழ சட்னி தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |