13 பந்துகளில் அரைசதம் அடித்த நமீபியா வீரர்! டி20 புதிய சாதனை
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் நமீபிய வீரர் ஜென் ஃப்ரைலிங்க் அதிவேக அரைசதம் அடித்து சாதனை படைத்தார்.
ஜென் ஃப்ரைலிங்க்
புலவாயோவில் ஜிம்பாப்வே மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நடந்து வருகிறது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நமீபியா துடுப்பாட்டத்தை தொடங்கியது. தொடக்க வீரரான ஜென் ஃப்ரைலிங்க் (Jan Frylinck) சிக்ஸர்களை பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டினார்.
சாதனை
அவர் 13 பந்துகளில் அரைசதம் விளாசி சாதனை படைத்தார். நமீபியா அணிக்காக குறைந்த பந்துகளில் 50 ஓட்டங்களை எட்டிய முதல் வீரர் ஜென் ஃப்ரைலிங்க் ஆவார்.
மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த மூன்றாவது வீரர் என்னும் பெருமையையும் பெற்றார்.
தொடர்ந்து ஆடிய ஃப்ரைலிங்க் 31 பந்துகளில் 77 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 6 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |