ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா - மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது
ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா, மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி, முதல் தேர்தலாக 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளார்.

தனது திரை வாழ்க்கையின் கடைசி படமாக ஜன நாயகன் இருக்கும் என அறிவித்துள்ளார்.
இந்த படம் வரும் 2026 ஜனவரி 9 ஆம் திகதி திரைக்கு வர உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் நடைபெற்று வருகிறது.

நேற்றே விஜய் தனி விமானம் மூலம் மலேசியா சென்றடைந்தார். விஜய் மட்டுமல்லாது, படத்தில் பணியாற்றிய இசையமைப்பாளர் அனிருத், பூஜா ஹெக்டே, பிரியாமணி, மமிதா, உள்ளிட்ட பலரும் நிகழ்வில் பங்கேற்க மலேசியா சென்றுள்ளனர்.
இசை வெளியீட்டு விழாவுக்கு முன்னதாக நடைபெற்ற இசை நிகழ்ச்சியில்,விஜய் படத்தின் பல்வேறு பாடல்களை பாடி பாடகர்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.
புகித் ஜலீல் மைதானத்தில் நடைபெரும் வரும் இந்த நிகழ்வில், ஏறத்தாழ 80 ஆயிரம் ரசிகர்கள் கலந்துகொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யின் கடைசி படத்தின் இசை வெளியீட்டு விழா, மலேசியாவில் புதிய சாதனையை படைத்துள்ளது.
இந்த நிகழ்வில் மொத்தம் 80 ஆயிரம் ரசிகர்கள் கலந்துகொண்டுள்ள நிலையில், மலேசியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிக அளவு பார்வையாளர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியாக ,மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |