ஜனநாயகன் திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தமிழ்நாட்டில் தொடங்கியது
முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தின் முன்பதிவு தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளது.
ஜனநாயகன் திரைப்படம்
ஹெச். வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் வரும் வியாழக்கிழமை உலகம் முழுவதும் சுமார் 3,000 திரையரங்குகளில் வெளியாகிறது.
தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 950 திரையரங்குகளில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலமைச்சர் விஜய்யின் கடைசிப் படம் என்பதால், ஜனநாயகன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தொடங்கிய முன்பதிவு
கர்நாடகா மற்றும் கேரளாவில் ஏற்கனவே முன்பதிவு தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டிலும் முன்பதிவு தொடங்கும் எனத் தகவல் வெளியானது.
இதையடுத்து, தற்போது தமிழ்நாடு முழுவதும் ஜனநாயகன் படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
BOOKINGS OPEN NOW 🔥
— KVN Productions (@KvnProductions) July 19, 2026
Let the celebrations begin nanba nanbis ♥️#JanaNayaganFromJuly23
The Hon'ble Chief Minister @actorvijay @TheKVNofficial @KvnProductions #HVinoth @hegdepooja @anirudhofficial @thedeol @_mamithabaiju @Jagadishbliss @LohithNK01 @RamVJ2412 @TSeries pic.twitter.com/wuDhtCjXe2
முதலில் சில பகுதிகளில் மட்டும் முன்பதிவு தொடங்கிய நிலையில், தற்போது அனைத்து பகுதிகளிலும் முன்பதிவு தொடங்கியுள்ளது.
இந்நிலையில், ஜனநாயகன் படத்தின் முன்பதிவு தமிழ்நாட்டில் தொடங்கியது என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |