எதிர்பார்ப்புகளை என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை! இலங்கை பெண் ஜனனியின் பகிர்ந்த உருக்கமான பதிவு
விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 70 நாட்களை கடந்து இருக்கிறது.
21 போட்டியாளர்களுடன் ஆரம்பமான இந்த நிகழ்ச்சியில் வாரம் வாரம் எலிமினேஷன் நடைபெற்று வரும்.
இந்நிலையில யாரும் எதிர்பாராத விதமாக நேற்றைய நிகழ்ச்சியில் இருந்து ஜனனி வெளியேறினார்.
image - Instagram
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர், முதல் முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜனனி பகிர்ந்துள்ள பதிவு, அதிகம் வைரலாகி வருகிறது.
அதில் அவர் கூறியுள்ளதாவது,
“ நான் BIGG Boss வீட்டிற்குள் இருக்கிறேன் என என்னை ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் நன்றி..! உங்கள் வாக்குகளால் நீங்கள் அனைவரும் என்னை பெரிய அளவில் ஊக்கப்படுத்தியுள்ளீர்கள். இந்த நாட்களில் உங்களது எதிர்பார்ப்புகளை என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்றால் மன்னிக்கவும்.
இந்த நிமிஷம் முதல் என்னால் இயன்ற எல்லா வழிகளிலும் உங்கள் அனைவரையும் மகிழ்விப்பேன்.” என்று உருக்கத்துடன் கூறியுள்ளார்.
தற்போது அந்த தற்போது பாரவையாளர்கள் கவனத்தை அதிகம் பெற்று வருகிறது.