பிரபல நடிகருக்கு தனது சொகுசு வீடுகளை விற்ற ஸ்ரீதேவியின் மகள்!
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், தனது சொகுசு வீடுகளை நடிகர் ராஜ்குமார் ராவுக்கு விற்பனை செய்துள்ளார்.
பிரபல நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியின் மகள் ஜான்வி கபூர் இந்தி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இவர், கடந்த 2020ஆம் ஆண்டு மும்பையின் ஜூகு பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சொகுசு வீடுகளை விலைக்கு வாங்கினார். 14, 15 மற்றும் 16 ஆகிய மூன்று தளங்களில் உள்ள அந்த வீடுகளின் மதிப்பு அப்போது 39 கோடி ஆகும்.
அவர் வாங்கிய வீடுகள் ஆறு கார் பார்க்கிங் வசதியுடன் 3,456 சதுர அடி கொண்டதாகும். இந்த நிலையில் தனது வீடுகளை பிரபல இந்தி நடிகர் ராஜ்குமார் ராவுக்கு விற்க முடிவு செய்த ஜான்வி கபூர், 43 கோடியே 87 லட்சத்திற்கு விலை பேசினார்.
அதனைத் தொடர்ந்து பத்திரப்பதிவுக்கு மட்டும் 2.19 கோடி செலுத்தப்பட்ட நிலையில், ராஜ்குமார் ராவுக்கு மூன்று வீடுகளையும் ஜான்வி கபூர் விற்றுள்ளார்.
ஜான்வி கபூரும், ராஜ்குமார் ராவும் விரைவில் பீட், மோனிகா, ஓ மை டார்லிங் ஆகிய படங்களில் இணைந்து நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.